வழக்கு விசாரணையின் போது போலீசார் சீருடையில் தான் ஆஜராக வேண்டும் - நீதிபதி அறிவுறுத்தல்!

0 1598

வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகும் காவல்துறையினர் அனைவரும் சீருடையில் தான் வரவேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற வழக்கு ஒன்றின் விசாரணையின் போது பெண் காவலர் ஒருவர் சீருடை அணியாமல் சல்வார் கமீஸ் அணிந்த படி ஆஜரானார். இதனைக் கவனித்த வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்றார்.

அப்போது பேசிய நீதிபதி கட்கரி, நீதிமன்றத்தில் ஆஜராகும் காவல்துறையினர் சீருடைகளை அணிந்த படிஆஜராக வேண்டும் என்றார். சீருடை அணியாத காவல் அதிகாரிக்கு கடந்த காலத்தில் அபராதம் விதிக்கப்பட்டதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments