பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலமாக வாடகை, கல்வி கட்டணம், வரி செலுத்தும் வசதி - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்..!
பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) மூலமாக வாடகை, கல்விக்கட்டணம், வரி மற்றும் பிற சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்தும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை தொடர்பான அறிவிப்பை மும்பையில் இன்று வெளியிட்ட சக்திகாந்த தாஸ், வணிகர்களின் பயன்பாட்டிற்கு இருந்து வந்த பாரத் பில் பேமென்ட் முறையை, அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் மாற்றி உள்ளதாக தெரிவித்தார்.
பணம் செலுத்தியதற்கான எஸ்எம்எஸ் அல்லது ரசீதும் உடனடியாக கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை, பூஜ்ஜியம் புள்ளி 35 சதவீதம் உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார். இதனால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Comments