ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பாக தேவைப்பட்டால் கூடுதல் விதிகளை நீதிமன்றமே வகுக்கலாம் - தமிழ்நாடு அரசு வாதம்
ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதி தான் என்றும், தேவைப்பட்டால் நீதிமன்றமே போட்டி தொடர்பாக கூடுதல் விதிகளை வகுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. காளைகள் குழந்தைகளைப் போல் பராமரிக்கப்படுவதாகவும், பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றியே போட்டிகள் நடத்தப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு முடிந்த பிறகும் காளைகளை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். அப்போது, பரிசோதனை நடத்த தயாராக உள்ளதாக தமிழக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
Comments