டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி..!
டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 இடங்களில் வென்ற ஆம் ஆத்மி, 15 ஆண்டுகளாக பா.ஜ.க. வசம் இருந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என மூன்றாக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு கடந்த 4ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, தொடக்கம் முதலே ஆம் ஆத்மி, பாஜக இடையே இழுபறி நீடித்து வந்தது.
எனினும், இறுதிகட்ட சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய ஆம் ஆத்மி, 134 வார்டுகளில் வென்று மாநகராட்சியை தன்வசமாக்கியது. இதனையொட்டி, டெல்லியில் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
தேர்தலில் பாஜக 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
Comments