400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன்.. 19 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புக்குழுவினர் போராட்டம்!

0 3084

மத்தியபிரதேசம் பீட்டல் மாவட்டத்தில், 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து சிக்கிக்கொண்ட 8 வயது சிறுவனை மீட்க, 19 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர்.

பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் தன்மயி சாகு, அங்குள்ள தோட்டத்தில், தனது சகோதரியுடன் நேற்று விளையாடிக் கொண்டிருந்தார். மாலை 5 மணியளவில், திறந்த நிலையிலிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தன்மயி விழுந்ததை பார்த்ததாக, அவனது சகோதரி தகவல் அளித்ததை தொடர்ந்து, மாநில பேரிடர் மீட்புப்படையினர், மீட்புப் பணியைத் துவங்கினர்.

55-வது அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ள நிலையில், நேற்று மாலை தொடங்கிய மீட்புப்பணி, 19 மணி நேரத்தை கடந்து, தொடர்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments