காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது.. தென்மேற்கு வங்கக்கடலில் "மாண்டஸ்" புயல் உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

0 2861

வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 830 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றக்கூடும் என்றும் நாளை தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறியுள்ளது.

இதன் காரணமாக, நாளை சென்னை உட்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், நாளை மறுநாள் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.

இந்நிலையில், சென்னை, கடலூர், நாகை, உள்ளிட்ட 9 துறைமுகங்களில், புயல் உருவாக சாத்தியக் கூறு உள்ளதைக் குறிக்கும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments