கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்!

0 1536

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிவன் மற்றும் முருகன் கோவில்களில் மகாதீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இதனால் கோயில் முழுவதும் அகல் விளக்குகளின் ஒளியால் ஜொலித்தது.

 

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு 25 அடி உயர சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தொடர்ந்து சண்முக விலாச மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அலங்காரத்தில், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

 

திருச்சி, மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது.

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைக் கோயிலுக்கு எதிரில் உள்ள பச்சரிசி மலையில் 150 கிலோ நெய்யால் மகா தீபம் ஏற்றப்பட்டது.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா மகாதீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.

 

கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி கோவை மாவட்டம் பேரூர் படித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை நொய்யல் என்ற எழுத்து வடிவில் பக்தர்கள் ஏற்றி ஜொலிக்க வைத்து வணங்கினர்.

 

அதுபோல நெல்லை, விராலிமலை உள்பட பல்வேறு இடங்களில் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments