ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டேக் சாதனங்கள் மீது ஒருவருக்கு தெரியாமல் துப்பறிய பயன்படுத்தப்படுவதாக புகார்..!
ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்பான ஏர்டேக் சாதனத்தால் அமெரிக்காவில் பல வழக்குகளை சந்தித்து வருகிறது.
சிறிய பொத்தான் மற்றும் கீசெயின் வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பறியும் வகையிலான இந்த சாதனம் மூலமாக ஒருவரை கண்காணிக்க முடியும் என்பதால் இதனை பயன்படுத்தி அமெரிக்காவில் காதலன் காதலியை கண்காணிப்பது, மனைவியை கணவன் கண்காணிப்பது போன்ற தனிமனித சுதந்திரம் மீறப்பட்டதாக நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது.
ஏர்டேக் செயல்பாடுகளில் பல அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்த போதிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருப்பதால் ஆப்பிள் நிறுவனம் இதனை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Comments