தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல - நீதிபதி
கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே, ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில், ஆசிரியர் நியமன நடைமுறையை 3 மாதங்களில் மறு ஆய்வு செய்யுமாறு, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்று தெரிவித்தார்.
தற்போது ஆசிரியர்களாக இருக்கும் பெரும்பாலானோர், கல்லூரிகளுக்கு நேரில் சென்று படிக்காதவர்களாக இருப்பது துரதிஷ்டவசமானது என வேதனை தெரிவித்த நீதிபதி, ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக மறுஆய்வு செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
Comments