சீனாவில் ஐபோன் உற்பத்தியை குறைக்க ஆப்பிள் திட்டம்: இந்தியாவில் ஐபேட் உற்பத்தி செய்ய வாய்ப்பு
ஆப்பிள் நிறுவனம் சீனாவில் தயாரித்துவரும் தனது பொருட்களின் உற்பத்தியில், 30 சதவீதத்தை வேறு நாட்டிற்கு மாற்ற திட்டமிட்டிருப்பதால், ஆப்பிள் ஐபேட் உற்பத்தி, இந்தியாவிற்கு இடம் மாறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளால் பாக்ஸ்கான் ஆலையில் நடந்த போராட்டத்தால், ஆப்பிள் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியா மற்றும் வியட்நாமில் ஐபோன் தயாரிக்க ஆப்பிள் திட்டமிடுவதாகவும், இதனால், வரும் 2025 ஆம் ஆண்டில் ஐபோனின் நான்கில் ஒரு போன் இந்தியாவில் உற்பத்தியாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டின் 4 ஆவது காலாண்டிலேயே இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஆப்பிள் பொருட்களின் மதிப்பு ஒற்றை இலக்கத்திலிருந்து 45 சதவீதத்தை எட்டலாம் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Comments