கள்ளழகர் கோயில் நிலத்தை ஏமாற்றி விற்க முயன்றவர் கைது
மதுரை கள்ளழகர் கோயில் நிலத்தை ஏமாற்றி விற்க முயன்றதாக கொடைக்கானலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ரங்கநாயகியிடம், திண்டுக்கலைச் சேர்ந்த பத்மநாபன் மற்றும் அவரது மகன் சதீஷ்குமார் ஆகியோர் வண்டியூர் ஸ்ரீநாச்சாரம்மன் அறக்கட்டளையின் 70 சென்ட் இடம் விற்பனைக்கு உள்ளதாக கூறியுள்ளனர்.
அதன் நிர்வாகிகள் எனக்கூறி குழந்தை செல்வம், ராஜ் ஆகியோரை அழைத்துசென்று, நிலத்தை 34 கோடி ரூபாய்க்கு பேசி அட்வான்ஸாக 70 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால், சந்தேகமடைந்த ரங்கநாயகி இதுதொடர்பாக விசாரித்ததில், கோயிலுக்கு சொந்தமான இடமென்று தெரியவந்தது.
புகாரின் பேரில் பத்பநாபன், சதீஷ் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிந்த போலீசார், கொடைக்கானலில் வைத்து சதீஷை கைது செய்தனர்.
Comments