சீனாவில் ''மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்தான் கோவிட்'' - வுஹான் ஆய்வக விஞ்ஞானி
சீனாவில், ''மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் தான் கோவிட்'' என வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய முக்கிய விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியில் பணியாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹஃப் எழுதிய 'வுஹான் பற்றிய உண்மை' என்ற புத்தகத்தின் சில பகுதிகள் வெளிவந்துள்ளன.
அதில், சீனாவில் வைரஸ் ஆராய்ச்சி பற்றிய சோதனைகள் போதிய பாதுகாப்பின்றி நடத்தப்பட்டதால், ஆய்வகத்தில் இருந்து தான் வைரஸ் கசிந்தது என்றும், இத்தகைய ஆபத்தான 'உயிரி தொழில் நுட்பத்தை' சீனர்களுக்கு மாற்றியதற்கு அமெரிக்க அரசாங்கமே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் 'மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டது' என்பது சீனாவுக்கு முதல் நாளிலிருந்தே தெரியும் என்றும் ஹஃப் தெரிவித்தார்.
Comments