கள்ள நோட்டுகள், கருப்புப் பணம், பயங்கரவாத நிதியை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் - மத்திய அரசு!
கள்ள நோட்டுகள் மற்றும் கருப்புப் பணம் போன்றவற்றை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட 58 மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜென்ரல் வெங்கடரமணி, கள்ள நோட்டுகள், பயங்கரவாத நிதி மற்றும் கருப்புப் பணம் ஆகிய இந்த 3 தீமைகளை சரிசெய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாகவும், இந்த மூன்றையும் துண்டு துண்டாக வெட்டாமல் இருந்தால் அவை எப்போதும் உயிருடன் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
Comments