பிரதமர் மோடி தலைமயில் இந்தியா ஜி20 தலைமை குறித்து ஆலோசனைக்கூட்டம்!

0 1920

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்று இருப்பது தனிப்பட்ட எந்த ஒரு கட்சிக்கோ நபருக்கோ அல்லாமல், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பெருமைக்குரியதாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், ஓராண்டுக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்க டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கட்சி வேறுபாடின்றி இது இந்தியா முழுவதற்குமே பெருமைக்குரிய தருணம் என்று கூறினார்.இது ஒவ்வொரு இந்தியனின் பெருமை என்றும் மோடி கூறினார். எனவே அனைவரும் இதனை ஒற்றுமையுணர்வுடன் செயல்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, உலக நாடுகளுக்கு இந்தியா அளித்து வரும் வாக்குறுதிகளுக்கு தமிழகம் துணையாக நிற்கும் என்று தெரிவித்தார். கால நிலை மாறுதல் போன்றவற்றில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments