திருமணமான 3 மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்-துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

0 2939

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண், மூன்றே மாதத்தில், துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது குறித்து, ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டுள்ளார்.

பேரணாம்பட்டு திருவிக நகர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரியும், ரங்கம்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீதரும் 2 ஆண்டுகளாக காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் ஸ்ரீதர் வீட்டாருடன் வசித்து வந்த நிலையில், நேற்று முன் தினம்  ஏற்பட்ட  தகறாரின்போது ஸ்ரீதர், ராஜேஸ்வரியை அடித்ததாக கூறப்படுகிறது.

மறுநாள் காலையில், ராஜேஸ்வரி வீட்டில் இல்லாததால், கணவரின் குடும்பத்தார் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், போக்கலூரில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து,  ராஜேஸ்வரியின் உடலை கைகள் கட்டப்பட்ட நிலையில் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments