கலவரத்துக்கு 5 மாதத்திற்கு பின் மூடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறப்பு.. மாணவ, மாணவிகள் வருகை!

0 2125

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் இசிஆர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி 5 மாதத்திற்கு பின் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.

மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கடந்த ஜூலை 17-ஆம் தேதி இப்பள்ளியில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்து பள்ளி சூறையாடப்பட்டது.

பின் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின்படி பள்ளி சீரமைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் உள்ளிட்டோர் பள்ளியை நேரில் சென்று பார்வையிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சம்ர்ப்பித்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments