கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு ரெயில்

0 1816

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு இன்றுமுதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

தெற்குரெயில்வே வெளிட்டுள்ள அறிவிப்பில் , திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னைகடற்கரை- வேலூர் இடையே இயக்கப்பட்ட ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ரெயில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தாம்பரம்-திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 6 மற்றும் 7-ந்தேதி மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments