ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்ய இந்தியாவுக்கு தலிபான்கள் அழைப்பு!

0 1848

ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்யும்படியும், பாதியில் நிறுத்தியுள்ள உள்கட்டமைப்பு பணிகளை மீண்டும் தொடங்கும்படியும் இந்தியாவுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசு அமைந்தபிறகு அங்கு மேற்கொண்டு வந்த பணியை இந்தியா பாதியில் நிறுத்தி விட்டது. இந்நிலையில் ஆப்கான் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் ஹம்துல்லா நோமானி மற்றும் இந்திய அதிகாரிகள் குழுவினர் கடந்த வாரம் சந்தித்து பேசினர்.

அப்போது அவர்களிடம், ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்யும்படியும், இந்தியாவின் முதலீடுகளுக்கு தகுந்த பாதுகாப்பு செய்து தரப்படுமெனவும்  தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments