செலவீனங்களை குறைக்கும் முயற்சியாக 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டம்!
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெட்டா, ட்விட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும், செலவீனங்களை குறைக்கும் முயற்சியாக, சில தினங்களுக்கு முன்பு பத்தாயிரம் ஊழியர்களை படிப்படியாக பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அதன் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. விநியோக மைய ஊழியர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், கார்பரேட் நிர்வாகிகள் ஆகியோரை நீக்க முடிவெடுத்து உள்ளதாகவும், இது மொத்த ஊழியர்களில் 1.3 சதவீதத்தை நெருங்குமென்றும் கூறப்படுகிறது.
Comments