குற்றவாளிகளின் கூடாரமாகக் கருதப்படும் 'சொயபங்கோ' நகரை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர்
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரில் , குற்றச்சம்பவங்களின் கூடாரமாகக் கருதப்படும் சொயபங்கோ நகரை பாதுகாப்பு படையினர் 10 ஆயிரம் பேர் சுற்றி வளைத்துள்ளனர்.
3 லட்சம் மக்கள் வசிக்கும் சொயபங்கோ நகரம், குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் தலைமையகமாக விளங்கியது.
அங்கு காவல்துறையினரால் நுழையமுடியாத சூழல் நீடித்துவந்த நிலையில், கிரிமினல் கும்பல்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் 10,000 பேரை அங்கு அனுப்பி அதிபர் நயிப் புக்கலே உத்தரவிட்டார்.
Comments