சர்வதேச விண்வெளி நிலையத்தில் சூரிய ஒளி மூலமாக மின்சாரம் தயாரிக்கும் புதிய ரோல்-அவுட் சோலரை நிறுவிய நாசா விண்வெளி வீரர்கள்
அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சூரிய ஒளி மூலமாக மின்சாரம் தயாரிக்கும் புதிய ரோல்-அவுட் சோலார் வரிசையை 7 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு நிறுவினர்.
இதுகுறித்த வீடியோவை நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதோடு, விண்வெளி வீரர்கள் ஜோஷ் கசாடா, ஃபிராங்க் ரூபியோ ஆகியோர் வெற்றிகரமாக தங்களது பணியை முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய சூரிய ஒளி பேனலால் விண்வெளி நிலையத்திற்கான மின்தேவை பூர்த்தியாவதோடு, அதிக எடையிலான பழைய மின் அமைப்புகளை மாற்றவும் முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Comments