வழக்கு விசாரணையை யூடியூப்பில் முதல் முறையாக நேரலை செய்தது கேரளா உயர்நீதிமன்றம்
கேரளா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை முதல் முறையாக யூடியூப்பில் நேரலை செய்யப்பட்டது.
சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களில் தலைமை அர்ச்சகர் பதவி தொடர்பாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
தலைமை நீதிபதியிடம் இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான சிஜித் என்பவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, விசாரணை யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நீதிபதிகள் அனில் கே நரேந்திரன் மற்றும் பிஜி அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சின் சிறப்பு அமர்வு வழக்கை விசாரித்தது.
Comments