சர்வதேச விமான பாதுகாப்பு தரவரிசையில் இந்தியாவிற்கு 48 ஆவது இடம்
சர்வதேச விமான பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா 102 ஆவது இடத்திலிருந்து 48 ஆவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் சீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா இந்த இடத்தை பிடித்துள்ளது.
தரவரிசைப் பட்டியல் தயாரிப்புக்காக டெல்லி விமான நிலையத்தில் விமான பாதுகாப்பு தொடர்பான சட்டம், செயல்பாடுகள், விமானத் தகுதி, விமானத்தளம் உள்ளிட்டவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டதாகவும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு தரவரிசையில் 102 ஆவது இடமே கிடைத்ததாகவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.
Comments