கோவில்கள் என்பது தனிப்பட்டவர்களின் சொத்துக்கள் அல்ல... அது மக்களுக்கானது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1552

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 217 ஜோடிகளுக்கு தங்கத்தாலி, 30 வகையான சீர்வரிசைகளுடன் இலவசத் திருமணம் நடைபெற்றது.

சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் மேடையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவில்கள் என்பது தனிப்பட்டவர்களின் சொத்துக்கள் அல்ல... அது மக்களுக்கானது என்று தெரிவித்தார்.

இதுவரை 3 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments