கார் முதல் விமான உதிரி பாகங்கள் வரை 500 பொருட்களை வழங்க இந்தியாவிடம் ரஷ்யா கோரிக்கை!
கார் உதிரி பாகம் முதல் விமான உதிர பாகம் வரை 500 வகையான பொருட்களை தங்களது நாட்டுக்கு ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவிடம் ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரால் ரஷ்யாவின் தொழில் துறையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிடம் 14 பக்க அறிக்கை மூலம் 500 பொருட்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு இந்தியா பொருட்களை வழங்கினால் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியது வரும் என இந்திய நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
Comments