இலக்குகளை எட்டுவதற்காக பல மணிநேரம் பணி செய்தும் தங்களை ஓரம் கட்டிவிட்டனர் - எலான் மஸ்க் நிறுவன பொறியாளர் பகிரங்க குற்றச்சாட்டு!

0 2016

இலக்குகளை எட்டுவதற்காக பல மணிநேரம் பணி செய்தும் தங்களை ஓரம்கட்டியதாக எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பணியாளர் ஒருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

நியூயார்க்கில உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய  ஜான் ஜான்சன் என்ற பொறியாளர் தனது மனகுமுறலை பிளாக் ஒன்றில் பதிவிட்டுள்ளார்.

அதில், வாரத்தின் 7 நாட்களும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சென்று பணிபுரிந்ததுடன் கொரோனா காலத்திலும் ராக்கெட் தளங்களுக்கு சென்று தாம் பணி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு தமக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்னர் தம்முடைய பணிகளை குறைந்த அனுபவம் கொண்டவர்களிடம் கொடுத்ததாகவும், பின்னர் தாம் ஓரங்கட்டப்பட்டதால் அந்த நிறுவனத்தில் இருந்தே வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments