டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் அட்டாக்... 12-வது நாளாக கணினி சர்வர்கள் பழுது!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சைபர் தாக்குதலுக்கு ஆளானதையடுத்து 12-வது நாளாக அதன் கணினி சர்வர்கள் இயங்கவில்லை.
சுமார் 3,000 கணினிகள் ஸ்கேன் செய்யப்பட்டு எதிர்கால பாதுகாப்புக்காக வைரஸ் தடுப்பு மென்பொருள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இணைய தரவுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையும் நவம்பர் மாதத்தில் ஒரு முழுநாள் சைபர் தாக்குதலுக்கு ஆளானதாகவும், அதே நேரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments