மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை முழுமையாக தடுக்க உதவும் ஆர்சிடி கருவி
மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை முழுமையாக தடுக்க உதவும் RCD கருவிகளை, வீடுகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளில் தவறாமல் பயன்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரெசிடுயல் கரன்ட் டிவைசை, மின் இணைப்புடன் இணைக்கும்போது, மின் ஒயர்களில் பழுது ஏற்பட்டாலோ, சுவர்கள், மின் சாதனங்களில் மின் கசிவு ஏற்பட்டாலோ, உடனடியாக மின்சாரம் செல்வது துண்டிக்கப்படும்.
அதேபோல், வீடுகளில் 15 மில்லி ஆம்பியர் அளவு மின் இழப்பு ஏற்பட்டால், ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் இக்கருவி மின்சாரத்தை நிறுத்திவிடும்.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் RCD கருவிகளை கட்டாயம் பொருத்த அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், மின் இணைப்புகளை புதிதாக பெறுவோரும், ஏற்கனவே பெற்றிருப்போரும் இக்கருவியை பொருத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments