''அக்னி வீரர்கள் திட்டத்தில் கடற்படையில் 341 பெண்கள் உள்பட 3,000 பேர் சேர்ப்பு'' - கடற்படை தளபதி
அக்னி வீரர்கள் திட்டத்தின்கீழ் கடற்படையில் முதற்கட்டமாக 341 பெண்கள் உள்பட 3 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், முதன்முறையாக பெண் மாலுமிகள் பணியில் இணைந்துள்ளதாகவும் கடற்படை தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேட்டியளித்த அவர், 2047ஆம் ஆண்டிற்குள் கடற்படை தன்னிறைவு நிலையை அடையும் என அரசுக்கு உறுதியளித்துள்ளதாக கூறினார்.
மேலும், இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டிய கடற்படை தளபதி, பெருங்கடல் பகுதியில் உள்ள சீனாவின் போர்க்கப்பல்கள், ஆய்வுக் கப்பல்கள், மீன்பிடி கப்பல்களின் நடமாட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார்.
Comments