அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது..!
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாதில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியருக்கு, தர்மஅடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
அங்கு செயல்பட்டுவரும் (மாடர்ன் ஸ்கூல்) அரசு உதவிபெறும் பள்ளியில், உயிரியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவலின்பேரில், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், ஆசிரியர் ரமணாவை பணிநீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.
தகவலறிந்து வந்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments