மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா சரமாரி தாக்குதல்.. கடுங்குளிருடன் இருளில் தவித்து வரும் உக்ரைன் மக்கள்..!
உக்ரைனில், மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால், பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின் கட்டமைப்புகளை குறிவைத்து, ரஷ்யா ஏவுகணைகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
கடும் குளிர் காலமான தற்போது மின்சாரம் இல்லாமல், தண்ணீர் இல்லாமல், உணவு பொருட்களை சமைக்க தேவையான வெப்பம் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் தவிக்கின்றனர்.
முன்னதாக,ரஷ்ய வான்வழித் தாக்குதலில் குடிநீர் குழாய்களும் சேதமடைந்ததால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலைமை மோசமாக இருப்பதால், தண்ணீர், உணவு உள்ளிட்டவற்றை சேமித்து வைக்குமாறு கீவ் நகர மேயர் தெரிவித்திருந்தார்.
Comments