போலி முன் ஜாமீன் ஆணை சமர்ப்பித்த திமுக பெண் கவுன்சிலர், கணவர் கைது..!

0 1576

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், போலி முன் ஜாமீன் ஆணையை சமர்பித்த திமுக பெண் கவுன்சிலரையும், அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொழிலதிபரை கடத்தி நிலத்தை அபகரித்ததாகக் கூறப்படும் வழக்கில், சென்னை மாநகராட்சி 124-வது வார்டு கவுன்சிலர் விமலாவையும், அவரது கணவரும் திமுக நிர்வாகியுமான கிருஷ்ணமூர்த்தியையும் போலீசார் தேடிவந்தனர்.

இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுவிட்டதாகக் கூறி, ஆவணங்களை எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.

முன் ஜாமீன் ஆணையை மேஜிஸ்திரேட் சரிபார்த்த போது, போலி உத்தரவை சமர்பித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments