இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா
எல்லை அருகே இந்திய - அமெரிக்க படைகள், யுத் அப்யாஸ் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது சீனாவிற்கு தேவையில்லாத விஷயம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எல்லையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தரகண்டின் Auli-யில் நடைபெறும் பயிற்சி, இந்திய- சீன ஒப்பந்தத்தை மீறுவதாக சீனா தெரிவித்தது.
இந்தியா, தான் விரும்பிய நாட்டுடன் பயிற்சி மேற்கொள்ளும் என்றும், இந்த விஷயத்தில் அனுமதி வழங்க மூன்றாம் நாடுக்கு அதிகாரம் இல்லை என இந்திய தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இந்தியாவின் இக்கருத்தை உறுதிப்படுத்துவதாக அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments