டீக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்.. அருகில் உள்ள கடையில் இருந்த சிசிடிவி கேமராவும் திருட்டு..!
சென்னை வடபழனியில் டீக்கடையில் கொள்ளையடித்துவிட்டு, போலீசாரிடம் சிக்காமல் இருக்க, அருகில் இருந்த சிசிடிவி கேமராவையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றனர்.
நெற்குன்றம் சாலையில் டீக்கடை நடத்திவரும் அப்துல் காதர் என்பவர், வழக்கம்போல இன்று அதிகாலை டீக்கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்து 3 ஆயிரம் ரொக்கம், சிகரெட், பிஸ்கட் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகள் டிவிஆரில் பதிவாகும் என அறியாமல், சிசிடிவி கேமராவை எடுத்துச்சென்றால் போலீசாரிடம் சிக்கமாட்டோம் என எண்ணி, அருகில் உள்ள கடையில் இருந்த சிசிடிவி கேமராவையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு வடபழனி போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Comments