குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண், நகலை பெறக்கூடாது - உணவுத்துறை சுற்றறிக்கை

0 2051

குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண்ணை எக்காரணம் கொண்டும் கேட்கவோ, ஆதார் நகலை பெறவோ கூடாது என சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள், சம்பந்தப்பட்ட நியாய விலை கடைப் பணியாளர்களை நேரில் சந்தித்து தங்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டும் போதுமானது என அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments