செயற்கைக்கோள் மூலம் இணையசேவை வழங்கும் எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்'..!

0 1487

பூமியின் சுற்றுவட்டப்பாதையில், 7 ஆயிரத்து 500 செயற்கைக்கோள்கள் வரை நிலைநிறுத்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு, அமெரிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஸ்டார்லிங்க் செயற்கைகோள் நெட்வொர்க் மூலம் தொலைதூரப்பகுதிகளுக்கும் அதிவேக இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்காக பூமிக்கு அருகே 30 ஆயிரம் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.

ஏற்கனவே, 3 ஆயிரத்து 500 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இடநெருக்கடி உள்பட பல்வேறு காரணங்களால், தற்போது 7,500 செயற்கைக்கோள்கள் வரை நிலைநிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க 5 லட்சம் இணையசேவை வாடிக்கையாளர்களை கொண்ட ஸ்டார்லிங்க்-ல், ஒரு இணைப்பிற்கு இந்திய மதிப்பில் 49,000 ரூபாயும், மாதக்கட்டணமாக 9,000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments