இளம் பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு - அப்தாபிடம், 4 பேர் கொண்ட தடயவியல் நிபுணர்கள் விசாரணை
இளம் பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்தாபிடம், 4 பேர் கொண்ட தடயவியல் நிபுணர்கள் குழுவினர், விசாரணை நடத்தினர்.
உண்மை கண்டறியும் பாலிக்ராப் சோதனை மற்றும் நார்கோ சோதனைகளின் போது, அப்தாப் அளித்த பதில்கள் குறித்து நிபுணர்கள் குழு, அவரிடம் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிகிராப் சோதனை முடிவுகளை ஆதாரமாக நீதிமன்றம் எடுத்துக்கொள்ளாது என்றாலும், விசாரணைக்கு உதவும் வகையில் இச்சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
நார்கோ, பாலிகிராப் சோதனையின் முடிவுகள் ஒருமித்த கருத்தை எட்டவில்லை எனில், அடுத்ததாக பிரைன் மேப்பிங் முறையில் அப்தாபிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Comments