உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறவில்லை என்றாலும் மினி பிரேசில் எனப்படும் பாகிஸ்தானின் லியாரியில் களைகட்டிய கால்பந்து திருவிழா..!
உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறவில்லை என்றாலும், மினி பிரேசில் எனப்படும் பாகிஸ்தானின் லியாரி பகுதியில் கால்பந்து திருவிழா களைகட்டியுள்ளது.
லியாரியின் தெருக்களில் பிரேசில், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணியின் வண்ணங்களை இளைஞர்கள் வரைந்துள்ளனர்.
சுவர்களில், கால்பந்து நட்சத்திரங்களான ரொனால்டோ, மெஸ்ஸி மற்றும் நெய்மரின் ஓவியமும் அதிகளவில் வரையப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து கத்தாரில் அல்ல, லியாரியில் நடைபெறுவதுபோல் உணர்வதாகவும், அங்குள்ள கால்பந்து பயிற்சி அகாடமியின் உறுப்பினர் ஒருவர் பெருமையுடன் தெரிவித்தார்.
Comments