புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிக்கு நெஞ்சு வலியால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் போது உயிரிழப்பு..!

0 1824

சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிக்கு, நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

கடந்த 25-ம் தேதி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான சாகுல் மீரானிடம், இன்று காலை போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி, மயங்கியதாக சொல்லப்படுகிறது.

மயக்கம் தெளிந்தபின், அவருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டதையடுத்து, போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments