மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்..!
சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ நிர்வாகம் அறிவிக்கும் எண்ணிற்கு Hi என வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பினால், chat board என்ற முகப்பு பக்கம் தோன்றும் எனவும், அதில் பயணச்சீட்டை எடுப்பது தொடர்பான தகவல்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பயணியின் பெயர், புறப்படும் இடம் மற்றும் இறங்கும் இடம் ஆகியவற்றை பதிவுசெய்து வாட்ஸ்-அப், கூகுள்பே அல்லது யு-பே மூலமாக பணம் செலுத்தினால், டிக்கெட் வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பப்படும்.
இந்தப் பயணச்சீட்டை, மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில் உள்ள க்யூ.ஆர்.குறியீடு ஸ்கேனரில் காண்பித்து பயணிக்கலாம். அதே போல் வெளியே செல்லும்போது க்யூ.ஆர் குறியீடு ஸ்கேனரில் காண்பித்து வெளியே செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments