சென்னையிலிருந்து தோஹா புறப்பட்ட விமானத்தில் எந்திர கோளாறு.. உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் உயிர் தப்பிய பயணிகள்..!
சென்னை விமான நிலையத்திலிருந்து 139 பயணிகளுடன் தோஹா புறப்பட்ட விமானத்தில் எந்திர கோளாறு இருந்தது உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
கத்தார் ஏர்வேஸ் விமானம் ஓடுதளத்தில் சென்றபோது எந்திரக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து விமானி கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு மீண்டும் விமானத்தை திருப்பி வந்து டாக்சி பாதையில் நிறுத்தினார். எந்திரக்கோளாறு சரிசெய்யப்பட்டபின் விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments