நடிகர் ராஜ்கிரண் அன்று சொன்னது இன்று நடந்தது..! நகையும் பணமும் தான் குறியா..?

0 7123
நடிகர் ராஜ்கிரண் அன்று சொன்னது இன்று நடந்தது..! நகையும் பணமும் தான் குறியா..?

நடிகர் ராஜ்கிரண் வீட்டில் இருந்து நகைகளை எடுத்துச்சென்றது தொடர்பாக, அவரது வளர்ப்பு மகள் மற்றும் மகளின் காதல் கணவர் நடிகர் முனீஸ்ராஜாவிடம் போலீசார் விசாரித்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த இளங்கோவன் பத்மஜோதி தம்பதியரின் மகள் ப்ரியா. கடந்த 2014 ஆம் ஆண்டு இளங்கோவனை பிரிந்த பத்மஜோதியை, நடிகர் ராஜ்கிரண் 2-வது திருமணம் செய்து கொண்டார். பத்மஜோதியை கதீஜா என்றும் வளர்ப்பு மகளான ப்ரியாவை ஜனத்ப்ரியா என்றும் அழைத்து வந்தார்.

37 வயதான வளர்ப்பு மகள் பிரியா, சினிமா மற்றும் சீரியல் நடிகரான முனீஸ் ராஜாவை முகநூல் மூலம் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.

இதனால் விரக்தி அடைந்த ராஜ்கிரண், தனது வளர்ப்பு மகளுக்கும், தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றும், தன்னிடம் இருந்து நகை மற்றும் பணத்துக்காகவும், நற்பெயரை கெடுப்பதற்காகவும் அந்த நடிகர் தனது மகளை அழைத்துச் சென்றிருப்பதாக அறிக்கை வெளியிட்டார்

அண்மையில் ராஜ்கிரணின் 2 வது மனைவி கதீஜா சென்னை போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது மகள் ஜனத்ப்ரியா, 17 சவரன் நகை மற்றும் குடும்பத் தாலியை எடுத்துச் சென்று விட்டதாகவும், ஜனத்பிரியா, நடிகர் முனீஸ் ராஜா, ஜனத் பிரியாவின் அசல் தந்தை இளங்கோவன் ஆகியோர் ராஜ்கிரண் மீது அவதூறு பரப்பி வருவதாகவும் கூறி இருந்தார்.

ஜனத்ப்ரியாவின் கணவர் முனீஸ்ராஜா திருச்சி மாவட்டம் முசிறியில் வசிப்பதால் இந்த புகாரை அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். இதன் பேரில் ஜனத்பிரியா மற்றும் முனீஸ் ராஜா ஆகிய இருவரையும் அழைத்து நகையை எடுத்து வந்தது தொடர்பாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின் ,காவல் ஆய்வாளர் காவேரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர் .

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜனத்பிரியா, தனது ஒரிஜினல் தந்தை இளங்கோவன் மற்றும் பாட்டி அளித்த 40 சவரன் நகைகளை, ராஜ்கிரணுடன் சென்ற தனது தாய் வைத்துக்கொண்டு தரமறுப்பதாகவும் தனக்கு 37 வயது வரை திருமணம் செய்து வைக்காமல் அவர்கள் வீட்டில் வேலைக்காரியாக நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார். தனக்கு சேர வேண்டிய நகைகளை கொடுத்து விட்டு தங்களை நிம்மதியாக வாழ விடுமாறு ஜனத்பிரியா கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments