2022-ம் ஆண்டில், புலம்பெயர் தொழிலாளர்களால் இந்தியாவிற்கு 100 பில்லியன் டாலர் அனுப்பப்படும் - உலக வங்கி..!
இதுவரை இல்லாத அளவிற்கு, இந்தாண்டு புலம்பெயர் தொழிலாளர்களால் இந்தியாவிற்கு நூறு பில்லியன் டாலர் அனுப்பப்படும் என உலக வங்கி கணித்துள்ளது.
கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கால் சுமார் நூறு பில்லியன் டாலர் அந்நிய செலாவணி இருப்பை இந்தியா இழந்தது.
வளைகுடா நாடுகளில் குறைவான ஊதியத்தில் பணியாற்றி வந்த பலர், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற வளமான நாடுகளுக்கு இடம் பெயர்ந்ததால், அதிகளவில் இந்தியாவிற்கு பணம் அனுப்பப்படுகிறது.
அவ்வாறு அனுப்பப்படும் பணத்தின் அளவு இந்தாண்டு 12 சதவீதம் அதிகரித்து, நூறு பில்லியன் டாலரை எட்டிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களால் அதிக பணம் அனுப்பப்படும் நாடுகளின் பட்டியலில் சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸை பின்னுக்குத் தள்ளி, இந்தியா மீண்டும் முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments