நிதி நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி தம்பதியிடம் ரூ.35 லட்சம் பெற்று மோசடி.. பணத்தை திருப்பிக்கேட்ட தம்பதிக்கு கொலை மிரட்டல்..!
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே நிதி நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி, 35 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக, நிதி நிறுவன அதிபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பிளிக்கை பகுதியைச் சேர்ந்த திருமலைசாமி - லட்சுமி தம்பதியிடம், அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், கொசவப்பட்டியை சேர்ந்த காளிமுத்து ஆகியோர் தாங்கள் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறியுள்ளனர்.
முதலீட்டுத்தொகையாக 35 லட்சம் ரூபாயை வாங்கிய பிறகு, அதற்கான பங்குத்தொகையை தராமல் செந்தில்குமாரும், காளிமுத்துவும்
காலதாமதம் செய்ததாக தெரிகிறது.
திருமலைசாமி பணத்தை திருப்பிகேட்டபோது, தகாத வார்த்தைகளை பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
Comments