முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் வேறு பெயர் இருந்ததால் வாக்குவாதம்.. டிக்கெட் பரிசோதகர்கள் 3 பேர் சேர்ந்து தாக்கியதாக இளைஞர் புகார்!

0 1492

ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் 3 பேர் தன்னை தாக்கியதாக, சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

சுதேஷ் என்பவர் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு கடந்த 28-ம் தேதி ரயிலில் சென்றுகொண்டிருந்தார். டிக்கெட் பரிசோதகர் ஒருவர், சுதேஷிடம் டிக்கெட் பரிசோதித்ததில், பெண் ஒருவரின் பெயரில் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதை கண்டு, நீ என்ன பெண்ணா? என கேட்டுள்ளார்.

தனது அண்ணியை டிக்கெட் முன்பதிவு செய்ய சொன்னதால், தவறுதலாக அவரது பெயரை கொடுத்துவிட்டதாக, சுதேஷ் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வேறு பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேரும் சேர்ந்து, சுதேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இருதரப்பினரும் புகார் அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments