காதலியை கொலை செய்து 35 துண்டுகளாக்கி காட்டில் வீசிய வழக்கு: கொலையாளி அப்தாப்பிற்கு நார்கோ பரிசோதனை!
டெல்லியில் ஒரே வீட்டில் வசித்து வந்த காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட அப்தாப், நார்கோ பரிசோதனைக்காக ரோகினியில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
திகார் சிறையில் உள்ள அப்தாப்பிடம் ஏற்கனவே பாலிகிராஃப் என்ற சோதனை நடத்தப்பட்டு அதன் அறிக்கையை வல்லுநர்கள் தயாரித்து வரும் நிலையில் மூளையை பாதி மயக்க நிலைக்கு கொண்டுச் சென்று அதனடிப்படையில் விசாரணை நடத்தும் நார்கோ டெஸ்ட் அப்தாப்பிடம் மேற்கொள்ளப்படுகிறது.
Comments