வெளிநாட்டிலிருந்து தங்கம் இறக்குமதி செய்து இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி.. நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு!

0 1642

கடலூர் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்து இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செடுத்தான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் குடும்பத்தினர் அளித்த புகாரில், தங்களது குடும்ப நண்பர் இளங்கோவன் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சிறுகசிறுக 71 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தனர்.

சொன்னபடி பணத்தை தராமல் காலம் தாழ்த்திய வந்தததாகவும், உடல் நலக்குறைவு காரணமாக ராஜேந்திரன் இறந்துவிட்டதால், பணத்தை தரமுடியாது என்று மிரட்டி அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தினரை தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments