சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சியை இன்று வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

0 2618

ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மும்பை, டெல்லி, பெங்களுரு மற்றும் புவனேஸ்வரில் முதல் கட்டமாக டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படுகிறது. நாட்டில் புழங்கும் பணத்தை நிர்வகிப்பதற்கான பெரும் செலவைக் குறைக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை வெளியிடுகிறது.

பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, IDFC வங்கி ஆகிய நான்கு வங்கிகள் முதல் கட்டமாக டிஜிட்டல் கரன்சியை வெளியிடுகின்றன. பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, HDFC, கோட்டக் மகிந்திரா ஆகிய வங்கிகள் இ-நாணயத்தை வெளியிட பின்னர் அனுமதிக்கப்படும்.

கிறிப்டோ கரன்சிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.தனிநபர் இடையிலும் தனிநபர் வணிகர் இடையிலும் இந்த டிஜிட்டல் பணத்தை பரிவர்த்தனை செய்யலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments