கடந்த அக்டோபரில் 23 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் நீக்கம்

0 6446

கடந்த அக்டோபர் மாதத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் சுமார் 23 லட்சம்  கணக்குகளை தடை செய்து நீக்கியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகள் அனுப்பியவர் பெறுபவரைத் தவிர வேறு யாரும் காணாத வகையில் என்கிரிப்ட் செய்யப்பட்டிருப்பதாக  தெரிவித்தார்.

இதில் அவதூறுகள், மிரட்டல்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக புகார்களின் பேரில் கணக்குகள் முடக்கப்படுவதாகக் கூறினார். பயனாளிகளை பாதுகாப்புடன் வைத்திருப்பதே தங்கள் இலக்கு என்றும் வாட்ஸ்அப் அதிகாரி கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments