உலகின் 3 ஆவது பெரிய கிரிப்டோ கரன்ஸி நிறுவனமான எப்.டி.எக்ஸ் மீது மோசடி புகார்..!
உலகின் 3 ஆவது பெரிய கிரிப்டோ கரன்ஸி நிறுவனமான எப்.டி.எக்ஸ்ஸின் ( FTX ) நிறுவனர் சாம் பேங்க்மேன் ப்ரைடு (Sam Bankman-Fried) தனது பதவியை அண்மையில் ராஜிநானா செய்ததைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் மதிப்பு மிகப்பெரிய சரிவைக் கண்டது.
தனது முடிவு, தனிப்பட்ட முறையில் தனக்கும்பொருளாதார பாதிப்பை உள்ளாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தாலும், வாடிக்கையாளர்களின் பில்லியன் கணக்கான டாலர்களை, தனது மற்றொரு நிறுவனத்திற்கு அவர் மாற்றியதாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகார் குறித்து அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், நீதித்துறை ஆகியவை விசாரணை நடத்தி வரும் நிலையில், நிறுவனத்தை பதிவு செய்திருந்த பகாமஸ் நாட்டின் காவல்துறையினரும் சாம்பேங்க்மேனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments